பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்பிக்கள் குழுவினர் பக்ரைன் சென்றடைந்தனர்.
மனாமா வந்தடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பக்ரைனுக்கான இந்திய தூதர் வினோத் கே.ஜேக்கப் வரவேற்றார்.
இந்தக் குழுவில், முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதீன் ஓவைசி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
பக்ரைனை தொடர்ந்து சவுதி அரேபியா, குவைத் மற்றும் அல்ஜீரியா நாடுகளுக்கு இந்த குழு பயணம் மேற்கொள்கிறது.