ஊழலில் சிக்கி உள்ள உதயநிதியைக் காப்பாற்றுவதற்காகத் தன்மானத்தை விட்டு டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை எழும்பூரில் அவர் அளித்த பேட்டியில்,
ஊழலில் சிக்கிய உதயநிதியைக் காப்பாற்றுவதற்காக டெல்லி சென்று முதல்வர் காத்திருப்பதாக தெரிவித்தவர், முதலமைச்சர் ஸ்டாலின் நவீன வெண்குடை வேந்தராக உருவெடுத்துள்ளார் என ஜெயக்குமார் விமர்சித்தார்.
ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலில் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்யபடுகிறது என்றும் தன்னுடைய குடும்பம் பாதிக்கப்படுகிறது என்றால் காலில் விழுவது அவர்களுக்கு கை வந்த கலை என தெரிவித்தவர் தமிழகம் மிகக் கேவலமான முதலமைச்சரைப் பெற்றிருப்பது வேதனைக்குரியது என ஜெயக்குமார் குறிப்பிட்டார்.