கேரளாவிற்கு அதி கனமழை எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 3 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர்.
கேரளாவிற்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, காசர்கோடு, மலப்புரம், வயநாடு ஆகிய பகுதிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டு கொண்டதின் பேரில், தலா 30 பேர் கொண்ட 3 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர்.