டெல்லியில் தொடர் மழையால் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர்.
டெல்லியில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, பவானா, நரேலா, ஜகாங்கீர்புரி, சிவில் லைன்ஸ் என பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்துள்ளனர். கான்ட் பகுதியில் பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் வெள்ளநீரில் மூழ்கின.