டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாக அதன் தலைவர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் விளக்கமளித்தார்.
இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விவசாயம், சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பது குறித்தும், இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்துவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நிர்வாகத்துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு நலத் திட்டங்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்த கூட்டத்தின்போது பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
நாட்டில் வளர்ச்சியை கொண்டுவர மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து பணியாற்ற வேண்டுமென பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக கூறிய பி.வி.ஆர். சுப்பிரமணியம்,
இந்தியா தற்போதுள்ள இதே வேகத்தில் தொடர்ந்து பயணித்தால், அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் எனத் தெரிவித்தார்..