கடந்த 4 தசாப்தங்களில் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் இறந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.
ஐநா கூட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் பேசிய பிரதிநிதி, சிந்து நதிநீரை போரின் ஆயுதமாக இந்தியா பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கடுமையாக பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த ஆறரை தசாப்தங்களாக இந்தியாவிற்கு எதிராக மூன்று போர்களையும் ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்தி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது என தெரிவித்தார்.
மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எல்லை தாண்டிய தொடர்புகள் இருப்பதைக் கண்டறிந்த பிறகே சிந்துநதி நீர் நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.