சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அம்மாப்பட்டி பகுதியில் தங்கபாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. பட்டாசு ஆலை இன்று மூடப்பட்டிருந்த நிலையில், திடீரென பலத்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், பட்டாசு இருந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து, ஜேசிபி வாகனம் மூலம் கட்டட இடிபாடுகளை அகற்றினர். பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.