தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் கல்வி நிலையங்கள் திறப்பதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், நோட்டு தயாரிக்கும் பணி சேலத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் கல்வி நிலையங்கள் திறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இதனால், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள், நோட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்து வருகின்றன.
தமிழகத்தின் கல்வி நிலையங்களில் பயன்படுத்தப்படும் நோட்டுகளில் 80 சதவீதம், சிவகாசி, சேலம் உள்ளிட்ட இடங்களில் தயாராகிறது. அந்த வகையில், சேலத்தில் தற்போது 80 இடங்களில் நோட்டு தயாரிப்பு பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.