நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால், பாதுகாப்பு கருதி பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மேலும், கனமழையை எதிர்கொள்ள, 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் 80 பேர் கொண்ட மாநில மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அவலாஞ்சி, தொட்டபொட்டா மலை சிகரம், உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், பைன் பாரஸ்ட், லேம்ஸ் ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியுள்ள அறைகளுக்கு திரும்பி செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.