வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கெங்கையம்மன் கோயிலில் அம்மன் சிரசு விழா சிறப்பாக நடைபெற்றது.
பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் சிரசு விழா கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் காளி அம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட அம்மன் சிரசு, கெங்கையம்மன் கோயிலை வந்தடைந்தது. பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த அம்மனின் உடலோடு சிரசு பொருத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.