சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெறும் மலர் கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
வார விடுமுறையையொட்டி, ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தங்கள் குடும்பத்தினருடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
குறிப்பாக, 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியைக் காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். பல வண்ண மலர்களால் யானை, முயல், குதிரை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதை அவர்கள் பார்த்து ரசித்தனர்.
மேலும், பூத்து குலுங்கும் வண்ண மலர்களின் அருகில் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.