சேலம் மாவட்டம் மேட்டூரில் தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்லப்படுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேட்டூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் வேலைக்கு செல்லும்போதும் வேலை முடிந்து செல்லும்போதும் குப்பை வாகனத்தில் அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், பணியாளர்களை இவ்வாறு அழைத்து செல்லப்படுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.