திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சரியான முன்னேற்பாடு பணிகளை செய்யாததால், சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் வார விடுமுறையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அந்த வகையில் ஆந்திராவில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களும் நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருந்தனர். பணம் பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.