மகன் தேஜ் பிரதாப்பை ஆர்ஜேடி கட்சியில் இருந்து நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.
நீண்ட நாள் காதலி அனுஷ்கா யாதவுடன் வாழ்ந்து வருவதாக ஆர்ஜேடி கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் அறிவித்தார்.
இதையடுத்து தேஜ் பிரதாப்பை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், கட்சிக்கும், குடும்ப கௌரவத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதால் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.