சென்னை அடுத்த தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவுறுத்தி இருந்த நிலையில், காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், இரவு நேரத்தில் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பெருங்களத்தூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.