முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் தேசத்துக்கும் , ராணுவத்துக்கும் எதிராக சிலர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை ராம்நகரில் படைவீரர்களை பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம் என்ற நிகழ்வில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான இந்திய ராணுவம் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் இந்திய ராணுவத்துக்கு எதிராக சிலர் பல்வேறு கருத்துகளை பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கும் தமிழக அரசு, ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பேரணிக்கு அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல எனவும் கூறினார்.