நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ள சுற்றுலா தளங்களுக்குள் யாரும் சொல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தி உள்ளார்.
நீலகிரியில் அதிகனமழை எச்சரிக்கை காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி ட்ரீ பார்க் பகுதிக்குள் சென்ற கேரளா சுற்றுலா பயணிகள் மீது மரம் விழுந்ததில் ஆதிதேவ் என்ற சிறுவன் உயிரிழந்தார்.
சிறுவனின் உடல் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளப்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், கனமழை காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ள சுற்றுலா தலங்களுக்குள் யாரும் செல்லக்கூடாது என அறிவுறுத்தினார்.