தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 648 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.