மதுரை மாவட்டம செக்கானூரணி தேவர் சிலை அருகே சின்னத்திரை நடிகை வீட்டின் மேல் முகப்பு சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்தார்.
சின்னத்திரை நடிகையான சந்திரசேகரி என்பவர் வீட்டில் மராமத்து பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அப்போது பட்டாசு வெடித்த போது அதிர்வு ஏற்பட்டு முதல் தளத்தின் முன்பகுதி இடிந்து விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைந்துள்ள ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.