தேனியில் தனியார் ஆலைக்கட்டிடத்தின் மேல் பகுதியில் ஏணி மூலம் ஏறிய ஊழியர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
டொம்புச்சேரி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் அங்குள்ள தனியார் பருப்பு ஆலையில் பணிபுரிந்து வந்தார். இவர் ஆலைக் கட்டிடத்தின் மேல்பகுதிக்கு சென்றபோது கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதனையறிந்த சுரேஷின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் போரட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் ஊழியர் சுரேஷ் கீழே விழுந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில் அவர் ஏணி மூலம் மாடிக்கு ஏறுவதும், பின்னர் அங்கிருந்து கூரையை உடைத்துகொண்டு கீழே விழுந்து உயிரிழந்ததும் பதிவாகியிருந்தது.