ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடியில், கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படுகிறது.
மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், கடல் அலைகள் 5 அடிக்கும் மேல் எழும்பி வருகின்றன.
கடல் நீரானது தடுப்புகளை தாண்டி தேசிய நெடுஞ்சாலைக்குள் வந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.