தன் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் மணி ரத்னத்தை என்றும் மறக்க மாட்டேன் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சிம்பு, தன்னை வைத்து படம் எடுக்க எல்லோரும் பயந்த சமயத்தில், தன் மீது நம்பிக்கை வைத்தவர் மணிரத்னம் என தெரிவித்தார்.
கமல்ஹாசன், திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் படம் வருகிற ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.