பவன் கல்யாண் படத்துக்காக 5 ஆண்டுகளை இழந்தேன் என நடிகை நிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், ஹரி ஹர வீர மல்லு படம், தனக்கு மிகவும் சவாலான திரைப்படம் எனத் தெரிவித்தார். அந்த சவாலைச் சமாளிக்கப் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் ஒத்துழைப்பு அளித்தனர் எனவும் கூறினார்.
இந்த படத்திற்காகத் தான் கடந்த 5 ஆண்டுகளாக வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தேன் எனக் கூறிய நிதி அகர்வால், மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.