நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் நடைபெற்ற கேரம் போட்டியில் பங்கேற்க வந்த போட்டியாளர்கள் மது அருந்திய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
பள்ளிபாளையம் நகராட்சி மண்டபத்தில் தனியார் அமைப்பு சார்பில் கேரம் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த போட்டியாளர்கள் நகராட்சி மண்டபத்தின் வளாகப் பகுதியில் மது அருந்தியுள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.