தனது அப்பா கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க தான் தயாராக உள்ளதாகவும், அவர் சம்மதித்தால் எப்போது வேண்டுமானாலும் நடிக்க ரெடிதான் என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
இதே போல நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்ருதிஹாசன், ‘கூலி’ திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்ததாகவும் கூறினார்.
கடந்த 1997-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘சாச்சி 420’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.