ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்திய சினிமாக்கள் கையாளப்படும் விதம் பற்றிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பேச்சு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், ஆஸ்கார் விருது வழங்கும் தேர்வுக்குழுவில் இருப்பவர்கள், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து வரும் படங்கள் என்றாலே, அவற்றை நிறவெறி பார்வையில்தான் பார்ப்பார்கள் எனக் கூறினார்.
“இவர்கள் நாட்டில் சோற்றுக்கே வழியில்லை.. கழிவறைகள் இல்லை.. இவர்களெல்லாம் படத்தை எடுத்துக்கொண்டு இங்கே வந்துவிட்டார்களா?’ என்ற எண்ணம் அவர்களிடம் நிச்சயம் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், அதை மீறி நாம் படம் எடுக்கும்போதுதான், ‘எப்படி இதைச் செய்தீர்கள்?’ என்ற உணர்வை அவர்களுக்குள் விதைக்க முடியும் எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.