மோசமான வானிலை காரணமாகக் கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மலையேறிய பக்தர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இதன் காரணமாகவும், மோசமான வானிலை காரணமாகவும் மலையேறப் பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.