சிந்து நதி நீர் நிறுத்த விவகாரம் : ஐ.நா சபையில் இந்தியாவிடம் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்!
Mar 15, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிந்து நதி நீர் நிறுத்த விவகாரம் : ஐ.நா சபையில் இந்தியாவிடம் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
May 26, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த இந்தியாவின் முடிவைப் பற்றி ஐநா சபையில் பாகிஸ்தான் கொடுத்த பொய் தகவலை இந்தியா முறியடித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கர வாதத்தைப் பாகிஸ்தான் நிறுத்தாத வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் கிடப்பில் போடப்படும் என்று ஐநாவில் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் அசிம் இப்திகார் அகமது,  காஷ்மீர் பிரச்சினை குறித்து அவதூறான தகவல்களை முன்வைத்து, இருநாடுகளுக்கான மோதல், அணு ஆயுதபோர் ஆகலாம் என்று அச்சுறுத்தும் வகையில் பேசியிருந்தார்.

பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கடுமையாக விமர்சித்த  ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான முக்கியமான நான்கு காரணங்களைப் பட்டியலிட்டு பாகிஸ்தானின் பொய் முகத்தை அம்பலப்படுத்தி உள்ளார்.

ஒப்பந்தத்தின் முன்னுரையில் கூறியுள்ளபடி, 65 ஆண்டுகளுக்கு முன், நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணர்வில்தான், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இத்தனை ஆண்டுகளில், இந்தியா மீது மூன்று போர்களையும் ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்துவதன் மூலம் பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் அடிப்படை உணர்வை மீறியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களில் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மும்பை தாக்குதலிலிருந்து சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வரை,அப்பாவி மக்களைக்  கொடூரமாகப் படுகொலை செய்வது  எனப் பாகிஸ்தானின் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.

பொதுமக்களைக் கொல்லவும்,  மத நல்லிணக்கத்தையும் மற்றும் பொருளாதார செழிப்பையும் சீரழிக்கவும்  எல்லை தாண்டிய பயங்கர வாதத்துக்குப் பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவது குறித்து விவாதிக்க இந்தியா பல முறை கேட்டும், பாகிஸ்தான் தொடர்ந்து அவற்றை நிராகரித்து வந்தது. பாகிஸ்தானின் இந்த அணுகுமுறை, இந்தியா தனது சட்டப்பூர்வமான உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது என்று பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்துள்ளார்.

சுத்தமான எரிசக்தி, காலநிலை மாற்றம் மற்றும் மக்கள்தொகை அதிகரிப்பு  ஆகியவற்றிற்கான வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப தொலைநோக்கு பார்வையுடன் கூடிய சில அடிப்படை மாற்றங்கள் செய்யப்படவேண்டியுள்ளன.

சில பழைய அணைகளில் கடுமையான பாதுகாப்பு சிக்கல்கள் உருவாகியுள்ளன. உள்கட்டமைப்பில் செய்யப்படவேண்டிய எந்தவொரு மாற்றத்தையும் பாகிஸ்தான் தடுத்து வருகிறது. கடந்த 2012 இல், ஜம்மு-காஷ்மீரில் உள்ள துல்புல் திட்டத்தைப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கினர். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் பாதுகாப்புக்கும் பொதுமக்களின் உயிருக்கும் பாகிஸ்தான் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் பர்வதனேனி ஹரிஷ் குறிப்பிட்டார்.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது பாகிஸ்தான்தான் என்ற தெளிவுபடுத்திய இந்தியா, பயங்கரவாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டாத ஒரு நாடு பொதுமக்களைப் பாதுகாப்பது பற்றிப் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் கூறியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் மீண்டும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்து கடிதம் எழுதிய போதும், பாகிஸ்தான் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தது. ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில், போரை நிறுத்தும் படி கெஞ்சிய பாகிஸ்தான், இப்போது, சிந்து நதிநீரை வழங்கவேண்டும் என்று கெஞ்சத் தொடங்கியுள்ளது.

இந்த பின்னணியில்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதி நீர்  ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Tags: சிந்து நதி நீர்Indus River water issue: Pakistan humiliated by India at the UNஅசிங்கப்பட்ட பாகிஸ்தான்ஐ.நா சபை
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவியும் பக்தர்கள் : 2 நாட்களில் 1,80,000 பக்தர்கள் சாமி தரிசனம்!

Next Post

மயானமாகும் காசா : இஸ்ரேல் கொடூர தாக்குதல் – மருத்துவரின் குழந்தைகள் பலி!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies