கவர்ச்சி காட்சிகளில் நடிப்பது எளிதல்ல எனப் பாலிவுட் நடிகை பூமி பட்னேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியில் ‘தும் லகா கே ஹைஷா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூமி பட்னேகர், தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
இந்நிலையில் ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த பூமி பட்னேகர், நடிகைகள் அவ்வளவு எளிதில் கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டார்கள் எனவும், அதைச் செய்யும் நடிகைகளைக் கொண்டாட வேண்டாம், விமர்சிக்காமல் இருக்கலாமே என்றும் கருத்து தெரிவித்தார்.
மேலும், கவர்ச்சி காட்டும் பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.