தனுஷ் நடித்த குபேரா படத்தின் டீசர் ரிலீஸாகியுள்ளது.
கிரைம் திரில்லர் பாணியில் டீசர் காட்சிகள் அமைந்துள்ளன. சேகர் கம்முலா இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இப்படத்திற்குத் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ‘போய்வா நண்பா’ என்ற முதல் பாடல் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகவுள்ள நிலையில் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.