பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் திரைப்படத்தில் திருப்தி டிமிட்ரி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தை அனிமல் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ளார். முன்னதாக இத்திரைப்படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தீபிகா படுகோன் திரைப்படத்தில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து தற்போது திருப்தி டிம்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பிற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.