நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுண்ணாம்பு கால்வாய் ஆற்றில் சிக்கிய கார் 2 நாட்களுக்குப் பின் ஜேசிபி உதவியுடன் மீட்கப்பட்டது.
கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வரும் நிலையில், சூண்டி சுண்ணாம்பு கால்வாய் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தரைப்பாலம் வழியாக ஆற்றைக்கடக்க முயன்ற கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.
இதையறிந்த தீயணைப்புத்துறையினர் காரில் பயணித்த அனைவரையும் பத்திரமாக மீட்ட நிலையில் காரை மட்டும் அங்கிருந்த மரத்தில் கயிறு மூலம் கட்டி வைத்தனர். 2 நாட்களுக்குப் பிறகு தண்ணீரின் வேகம் குறைந்ததால் ஜேசிபி மற்றும் கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.