நடிகர் அஜித் குமாரின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனல் Ajith Kumar Racing என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சேனல் அவரது கார் ரேசிங் தொடர்பான செயல்பாடுகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது.
இதில் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயங்கள், பயிற்சி வீடியோக்கள் மற்றும் தொடர்புடைய பிற உள்ளடக்கங்கள் பகிரப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சேனல் மூலம் அஜித் குமார் தனது ரேசிங் ஆர்வத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.