கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே விவசாய தோட்டத்தில் மது மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
முதுகுருக்கி கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் குடில் அமைத்து மது விருந்து மற்றும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த சம்பவத்தை அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர்.
இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர்கள் உயர் ரக போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.