இந்துக்களுக்கு எதிரான மனநிலை திமுகவினரின் டிஎன்ஏவில் உள்ளது என பாஜக மாநிலச் செயலாளர் வினோத் பி செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் கலந்துகொண்டு மாநாட்டுத் தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு திமுக அரசு பாதுகாப்பு வழங்குகிறது எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், ஜூன் 22ஆம் தேதி மதுரையில் கட்சி பாகுபாடு இன்றி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.