சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக உதகையின் பல்வேறு பகுதிகளில் முறிந்து விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அதி கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், தற்போது மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகப் பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், உதகை சுற்றுவட்டார பகுதிகளில் 49 மரங்கள் சாலையில் முறிந்து விழுந்துள்ளன.
உதகை ஹில்பங்க், கேத்தி காவல் நிலையம், சோலூர் ஜங்ஷன், கேத்தி பாலடா, முத்தோரை பாலாடா, குன்னூர் கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 49 மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.