திருவண்ணாமலையில் மண்சரிவால் பாதிப்பிற்குள்ளான தங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தற்போது வரை பார்க்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
பெஞ்சல் புயலின்போது அண்ணாமலையார் கோயில் பின்பகுதியில், மலையிலிருந்து பாறைகள் உருண்டு மண்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்.
அவர்களுக்குச் சமுத்திரம் கிராமத்தில் தற்காலிகமாக இரும்பு ஷீட்டில் வீடுகள் கட்டி, பாதிக்கப்பட்ட நபர்களை அங்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குடியமர்த்தினார்.
தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் இரும்பு ஷீட்கள் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.