சென்னையில் வாய்ப் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு மருத்துவர் சுன்னத் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த விஜய் ஆனந்த், விஜயலட்சுமி தம்பதியினரின் 9 வயது மகன் ஜெயவர்தன் என்பவர் வாய் புண் காரணமாக, ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள தி கிரசன்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுவனின் வாயில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதாக மருத்துவர் கூறிவிட்டு, சிறுவனுக்கு சுன்னத் சிகிச்சை மேற்கொண்டு உள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் முகமது ஓவைசியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில், மருத்துவர் முகமது ஓவைசியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவத்துத்துறை இயக்குநரகத்தில் மருத்துவர் முகமது ஓவைசி மற்றும் செவிலியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.