ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து அரை மணி நேரம் கழித்தே பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்ற வெளியுறவுத்துறைக்கான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அரை மணி நேரம் கழித்தே, ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
3 நாடுகளைத் தவிர இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வேறு எந்த நாடுகளும் விமர்சிக்கவில்லை எனவும் கூறினார்.