எம்.பி. அசாதுதின் ஒவைசி உண்மையான இந்தியராகப் பேசுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராட்டியுள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதாகக் கூறி போலியான புகைப்படம் ஒன்றைப் பாகிஸ்தான் வெளியிட்டது.
இதுகுறித்து குவைத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எம்.பி. அசாதுதின் ஒவைசி, பாகிஸ்தான் ராணுவத் தலைவரைக் கடுமையாக விமர்சித்தார்.
போர் தொடர்பான போலி புகைப்படத்தைக் காட்டி முட்டாள்தனமாகக் கதைகளைப் பாகிஸ்தான் புனைவதாகத் தெரிவித்தார்.
அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, உண்மையான இந்தியராக ஒவைசி பேசுவதாகத் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார்.