நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட 68 பேருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
குடியரசு தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் முதற்கட்டமாக நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட 71 பேருக்கு கடந்த மாதம் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 68 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
இதில் நடிகையும், நடன கலைஞருமான ஷோபனா, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தார்.
அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பறையிசை கலைஞரான வேலு ஆசானுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.