திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இரண்டாம் நாள் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் தாராபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
சிவலிங்கத்திற்கு மேல் தாராபாத்திரம் பொருத்தப்பட்டு அதில் வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீர் சுவாமி மீது துளி துளியாக விழுந்து அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில், அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி அண்ணாமலையார் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆயிரத்து 8 கலசங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நிவர்த்தி பூஜை செய்தனர். தொடர்ந்து யாழ் ஒலி மூலம் 24 ராகங்கள் வாசித்து சுவாமிக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.