சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்த அமரர் சாவர்க்கர் புகழைப் போற்றி வணங்குவோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தேச விடுதலைக்காகவும், வளர்ச்சிக்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர், அமரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் அவர்கள் பிறந்த தினம் இன்று.
ஜன்னல் வசதி கூட இல்லாத அந்தமான் சிறையில், பத்து ஆண்டுகளுக்கும் மேல் மிக மோசமான சிறைக்கொடுமைகளை அனுபவித்தவர். சமூகத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் முன்னேற உழைத்தவர்.
பின்தங்கிய சமூக குழந்தைகள் படிக்க, பள்ளி தொடங்கியவர். அனைவருக்கும் ஆலய நுழைவு உரிமைக்காகப் போராடியவர். சாதி மறுப்பு இயக்கத்தை முன்னெடுத்தவர். வீரத்திற்கும், தியாகத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கி, சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்த அமரர் சாவர்க்கர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.