மதுரை அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட முயன்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து, அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோயில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மதுரையில் ஜூன் 22ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பூமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
மதுரை அம்மா திடலில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பந்தக்காலுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.