ஜெயிலர் 2 படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜுனாவை படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கப் படக்குழு பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள கூலி திரைப்படத்திலும் நாகர்ஜுனா நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிக்க அவர் ஒப்புக்கொண்டால் அடுத்தடுத்து ரஜினியுடன் இரண்டு திரைப்படங்களில் நாகர்ஜுனா நடிப்பார்.
மேலும் நாகர்ஜுனா – தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.