வாடகை உயர்வை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் சேலத்தில் ஜேசிபி வாகன உரிமையாளர்கள் 2 நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை வைத்து பலரும் தொழில் புரியும் நிலையில், வாகனங்கள் விலை உயர்வு, சாலை வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஜேசிபி வாகனத்தின் வாடகையை உயர்த்தியுள்ளனர்.
வாடகை உயர்வை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் சேலம் மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் 2 நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர்.
கோரிமேடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து வாடகை உயர்த்தப்பட்டதை கோஷங்களாக எழுப்பினர்.
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.