ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை தேஜஸ்வனி தங்கப்பதக்கம் வென்றார்.
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் சுல் நகரில் நடந்தது. இதில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு 8 பேர் தகுதி பெற்று இருந்தனர்.
அவர்களில் இந்தியாவின் தேஜஸ்வனி இறுதி ஆட்டத்தில் 31 புள்ளிகள் சேர்த்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
பெலாரசின் அலினா வெள்ளிப்பதக்கமும், ஹங்கேரியின் மிரியம் ஜாக்கோ வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.