அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் பிரியங்க் பஞ்சால் அறிவித்துள்ளார்.
உள்ளூர் தொடர்களில் குஜராத் அணிக்காக விளையாடிய அவர் அந்த அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.
குஜராத் தனது முதல் ரஞ்சி கோப்பையை வென்ற போது 1300 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
இவர் இந்திய ஏ அணிக்காகவும் விளையாடி உள்ளார். அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தனது 35-வது வயதில் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து இருக்கிறார்.