ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் புதிய கோல்ஃப் GTI பெர்ஃபாமன்ஸ் ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
முன்னர் விற்பனை செய்யப்பட்ட போலோ GTI மாடலுக்குப் பிறகு, இரண்டாவது GTI மாடலாக இந்தியாவில் வெளியாகியிருக்கிறது இந்த கோல்ஃப் GTI ஹேட்ச்பேக். இதில், நான்கு சிலிண்டர்கள் கொண்ட, 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் உதவியுடன் 100 கிமீ வேகத்தை 5.9 நொடிகளில் எட்டுகிறது. எக்ஸ்-ஷோரூம் விலையில் 53 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.