அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை மகளிர் நீதிமன்ற வளாகம் முன்பு அவர் அளித்த பேட்டியில்,
ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும் ஆவண, தடயவியல் சாட்சியங்கள் மூலம் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும் தண்டனை விவரங்கள் ஜூலை 2-ம் தேதி வெளியிடப்படும் என வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தெரிவித்தார்.
தண்டனையைக் குறைக்க வேண்டும் என ஞானசேகரன் கோரிக்கை வைத்தார் என்றும் ஞானசேகரனின் கோரிக்கைக்கு அரசு தரப்பில் கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது என்றும் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க அரசு தரப்பு கோரியுள்ளது என வழக்கறிஞர் மேரி ஜெயந்தி குறிப்பிட்டார்.